வறண்ட தேசம் போல்
varanda thesam pol
வறண்ட தேசம் போல் என் ஆவி ஏங்குது நீரில்லாமல் நிலையில்லாமல் கலங்கி ஏங்குது கிளையை தேடும் பறவை போல பரமன் உம்மை தேடுகிறேன் கரையை தேடும் அலையை போல உந்தன் அன்பை நாடுகிறேன் தாய்மடியை தேடுகின்ற பிள்ளையை போல இறைவா… இறைவா… இறைவா…
தாரை தேடும் மான்கள் போல உம்மை தேடுது விரகதாபம் மனது கொண்டு நிசியில் பாடுது இறைவா… இறைவா…
அன்னம் தேடும் எய்யோன் போல ஏந்தல் உம்மை தேடுகிறேன் விலங்கு உற்ற வினைவன் போல நண்பனுக்காய் ஏங்குகிறேன் வேடன் வலையில் மாட்டிக்கொண்ட புறாவை போல இறைவா… இறைவா… இறைவா…
குடிக்க நீரும் கிடைக்குமா? எனது தாகம் தீருமா? வாழ்வின் தேடல் முடியுமா? மெலிந்த வயிறு நிறையுமா? அமர இடமும் கிடைக்குமா? கையில் விலங்கு உடையுமா? இறைவா… இறைவா…