வரம் கேட்டு வருகின்றேன் இறைவா
varam kettu varugindren iraivaa
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என் குரல் கேட்டு அருளாயோ தலைவா ( 2 )
பகைசூழும் இதயத்துச் சுவரையெல்லாம் - என் பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் ( 2 ) புகைசூழ்ந்து இருள்வாழும் மனதில் எல்லாம் - 2 உன் பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்
நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் ( 2 ) பலியாக பிறர்க்கென்னை அளித்திட்ட பின் - 2 என் பரிசாக உனை கேட்கும் வரம் கேட்கின்றேன