வந்து ஆளை ஆவி தந்து
vandhu aalai aavi thandhu
1. வந்து ஆளை ஆவி தந்து ஆளை யா வந்து உதிரம் சிந்தி மீட்ட வல்ல இயேசு நாதனே வல்லமையும் வாக்குத்தத்த ஆவி ஊற்றிடும் நாதனே
2. பெந்தெகொஸ்தே நாளில் உமதப்போஸ்தலர் மேல் பலத்த காற்று முழக்கம் போல வல்லமையாய் வந்தோனே பெலவீனர் யாவர்க்கும் பெலனளித்திடும் வல்லோனே
3. ஆதிச் சபையில் வல்ல ஆவி அளித்தோனே அற்புதங்கள் அடையாலங்கள் இயேசு நாமத்தில் வழங்கிட உந்தனாவி காத்திருக்கும் தாசர்கள் மேல் ஊற்றுமேன்
4. இன்றும் உந்தன் வாக்கை நம்பி வந்தவரை இன்றும் என்றும் மாறாது என்று வாக்குத்தத்த மீந்தோனே இன்பமாய் ஆவி ஊற்றிடும் காத்திருக்கும் அடியார்மேல்
5. பின்மாரியின் ஆவி வேண்டச் சொன்னேனே ஆவியின் மழை இல்லாததால் ஆன்மாக்கள் அலையுதே பின்மாரியும் முன்மாரியும் செழிப்பாய் பெய்திட அருளுமேன்