வந்திறங்கும் வல்ல ஆவியே
vandhirangum valla aaviyae
வந்திறங்கும் வல்ல ஆவியே வாரும் இப்போ எங்கள் மத்தியில் வாக்குரைத்த வல்ல ஆவியால் - இன்று வல்லமையால் நிரப்பிடுமே
1.சுட்டெரிக்கும் சுத்த ஆவியே சுத்திகரித்திடும் எம்மையே சுத்தமுள்ள உந்தன் ஆவியால் சுத்தவானாய் எம்மையும் மாற்றும் கறைதிரையற்ற பரிசுத்த சபையாய் உம் சந்நிதியில் எம்மை நிறுத்தும்
2.அந்நிய பாஷை நிறைவுடனே ஆவி வரங்களால் ஜொலித்திடவே அப்போஸ்தலர் வரங்களினால் அசுத்த ஆவிகளை அழித்திடவே பெந்தெகொஸ்தே நாளின் ஆவி எம்மில் ஊற்றும் உம் வல்லமையால் என்னை நிரப்பும்
3.மாம்சமான யாவரின் மீதும்- பின் மாரியை ஊற்றுவேன் என்றீரே உயிர்ப்பிக்கும் ஆவியினாலே - எம் சரீரங்களை உயிர்ப்பியும் மேகமீதினில் நீர் வரும் நாளில் சேர எம் உள்ளமெல்லாம் வாஞ்சித்திடு