வந்திடுமே இயேசுவண்டை
vandhidumae yesuvandai
வந்திடுமே இயேசுவண்டை சேர்ந்திடுமே பாவ பாரம் தீர்ந்திடும்
வரும் புவியை அணைப்பேனென்று வாக்கு அன்பாய் அளித்தனர் - வந்
1. பாவத்தில் மாண்ட உனைப் பங்கமின்றித் விடுவிப்பேன் என்கிறாரே அன்பரின் சத்தம் கேட்கும் நாளில் அன்பாய்ப் பாதம் அண்டிக்கொள்வீர் - வந்
2. செல்வத்தை நாடி ஓடிச் செல்வாயோ? சேர்த்திடும் நரகில் எல்லாம் விழல் என்று எண்ணி நேகர் பாதம் அண்டிக்கொள்வீர - வந்
3. மாயமே மண்ணுலகில் யாவும் மனக்கவலை தரும் மயங்காமல் மனதில் தினம் மகி பேரன்பில் அமிழ்ந்து நட - வந்
4. மரணமே நினையா நேரமதில் வந்துன்னைச் சந்திக்கும் மரண வழி வீட்டுப் பரண் மாட்சி வழி நடந்திடுமே - வந்
5. மரப்பாயோ மாட்சிமை தான் மறந்து மானிடர்க்காய் மாண்டவர் மாறாப் பரிசுத்த மீந்து மன்னன் மார்பிலணைத்திடுவார் - வந்