வந்திடுமே தூய மகிமையின்
vandhidumae thooya magimaiyin
1. வந்திடுமே தூய மகிமையின் தேவா! சந்ததம் எம்மில் வசித்திடவே உந்தன் திரு மென்மையாய் புகழ்ந்திடவே எம்மையும் முற்றுமாய் ஆண்டிடுவீர்!
உன்னத ஆவியே! இறங்கிடு வீர்! உன்னத அன்பை ஊற்றிடுமே! உன்னத பெலன் உயிர்ப்பித்து என்னையும் உன்னதா உம்மைப் போல் மாற்றிடுமே
2. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய தேவா தேற்றுவீர் சபையில் ஆவியினால் வித்தையாம் பரிசுத்த ஆவியை ஊற்றியே மந்தையை மகிழ்விக்க இரங்கிடுவீர் - உன்னத
3. ஆவியை மழைபோல் ஊற்றிடும் தேவா! ஆவியின் வரங்களை பொழிந்திடுமே ஆதி அப்போஸ்தலர் காலம் போல் இன்றும் ஆவியின் எழுப்புதல் அனுப்பிடுவீர் - உன்னத
4. மரணத்தை ஜெயித்திடும் மா வல்ல இயேசுவே மரித்தோரில் முதற்பலன் ஆனவரே மரித்தோரை உயிர்ப்பிக்கும் பரிசுத்த ஆவியின் மா வல்ல சக்தியை எமக்கருள்வாய் - உன்னத
5. சரீரம் சபையின் சிரசு நேசரே தரிப்பியும் சாயலை ஆவியினால் மறுரூபமடைந்து யாம் மகிபனை சந்திக்க மகிமையின் ஆவியே உதவி செய்வீர் - உன்னத