வந்தேன் ஐயா உம் பாதத்தில்
vandhen aiyaa um paadhathil
வந்தேன் ஐயா உம் பாதத்தில் தந்தேன் என்னை உன் அன்புக்காய்
1. கர்த்தர் நீர் செய்த நன்மைகட்காய் காலமெல்லாம் உம்மை போற்றிடுவேன் ஆயிரம் நாவுகள் போதாதே அடிமை நானும் உமக்கையா
2. கலங்கி தவிக்கும் நேரங்களில் கண்ணீரைத் துடைத்து தேற்றினீரே சுமந்தீரே தோளின் மேல் பத்திரமாய் சுகமான செட்டையில் காத்தீரே
3. எந்தன் ஆவி ஆத்மா சரீரமே எந்தன் சுகம் பெலன் யாவையுமே பூவிலே உம் சேவை செய்யவே பூரணமாக ஒப்படைக்கிறேன்
4. உம் சித்தம் என்றும் செய்திடவே உன்னத ஆவியால் நிரப்புமே முற்றுமாய் பலியாக படைக்கிறேன் முடிவு வரை நாதா நடத்துமே
5. ஒப்புவித்தேன் என்னையுமே முற்றும் பரிசுத்தமாக்கிடவே நேசரே உம் வருகை நாளிலே மாசற்றோனாய் என்னை நீர் காணவே