வந்ததேனோ வந்ததேனோ
vandhadheno vandhadheno
வந்ததேனோ வந்ததேனோ தந்தையே பாரினில் வந்ததேனோ -2
தந்தையே இந்தத்தரணியில் நீர் தாழ்மை கோலமானதேன் -2 தாழ்த்தப்பட்ட தூசியை -2 தாசனாக்க வந்தீரோ -2
பரலோகில் பரனாய் இருந்த நீர் நரலோகில் வந்ததேன் நாதா -2 நாசம் போன நரரை -2 நாடி மீட்க வந்தீரோ -2
பரலோகின் மகா மகிமையை விட்டு மானிலத்தில் வந்ததேன் -2 மாண்டு போன மாந்தரை -2 மகிமைதனில் சேர்க்கவோ -2
பரலோகின் சிங்காசனத்தையும் விட்டு பூவுலகில் வந்ததேன் -2 அழிந்து போன அகதியை -2 அழிவினின்று மீட்கவோ -2
தலைசாய்க்க இடம் அற்றவராய் தரித்திரராய் வந்ததேன் -2 தரித்திரத்தில் ஆழ்ந்தோரை -2 தனயனாக்கி தீர்க்கவோ -2