வந்ததாரிவர்
vandhadhaarivar
வந்ததாரிவர் பரன் சொந்த மைந்தனோ வந்ததாரிவர் சுரர் துதிக்க நம் நரர் வடிவதனில் வந்ததாரிவர்
1. வானமும் அதிலுளவும் பூமியும் அதின் நிறைவும் ஞானமாய் அமைத்தவரோ வானவர் மலரடி பணிய
2. வழிமறந்தோர்க்கொரு ஒளியாய் வருபரனோ மனுமகனோ மரிசுதனோ மனுகுலம் தழைத்திட மதி சிறந்தவரடி பணிய
3. திரி தத்துவனாம் குருவோ தரு உத்தமமாம் தருவோ மனு சித்துருவாம் திருவோ கனிமரி பால் புவி அவதரித்து