வனாந்திரமே வாடாதே
vanaandhiramae vaadaadhae
வனாந்திரமே வாடாதே வானவர் இயேசு வந்துவிட்டார்
வருத்தங்களே வாதைகளோ வல்லவர் இயேசு வந்து விட்டார் வருந்திடாதே சோர்ந்திடாதே உன் வாழ்வினில் வசந்தமே
சோதனையோ வேதனையோ வென்றவர் இயேசு வந்து விட்டார் கலங்கிடாதே காத்திடுவார் உன் வாழ்வினில் வசந்தமே
கஷ்டங்களோ கண்ணீரோ கர்த்தர் இயேசு வந்துவிட்டார் கதறிடாதே கசந்திடாதே உன் வாழ்வினில் வசந்தமே
துன்பங்களோ தொல்லைகளோ தூயவர் இயேசு வந்துவிட்டார் துயர் துடைப்பார் துதித்திடுவேன் உன் வாழ்வினில் வசந்தமே