வனாந்திர வாழ்வு
vanaandhira vaazhvu
வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும் பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும்-2 மாற்றுவார் இயேசு மாற்றுவார் உன் வாழ்வை மாற்றுவார் தேற்றுவார் இயேசு தேற்றுவார் உன்னை ஆற்றித் தேற்றுவார் – 2
1. அன்று ஆகாரைக் கண்டவர் இன்று உன்னையும் காண்கிறார் தாகத்தை தீர்த்தவர் – உன் ஏக்கத்தை தீர்ப்பாரே – 2
2. யாபேசின் ஜெபம் கேட்டவர் இன்று உன் ஜெபம் கேட்பாரே துக்கமெல்லாமே சந்தோஷமாய் மாறுமே – 2
3. அன்று அன்னாளை நினைத்தவர் இன்று உன்னையும் நினைப்பாரே புலம்பல்கள் எல்லாமே ஆனந்தக் களிப்பாய் மாறுமே – 2
4. ஆடுகள் மேய்த்த தாவீதை அரசனாய் மாற்றினீர் உயர்த்தி வைப்பவர் கனப்படுத்தி மகிழ்வாரே