வனாந்தரம் ஏதேனாய் மாறட்டுமே
vanaandharam edhenaay maarattumae
வனாந்தரம் ஏதேனாய் மாறட்டுமே ஜீவநதி என்னில் பெருகட்டுமே ஆவியானவரே - 2 அசைவாடும் என்னில் அசைவாடும் அனல்மூட்டும் என்னில் அனல் மூட்டும்
பாத்திரனாய் விழித்திருந்து ஜெபிக்க ஜெப ஆவி ஊற்றிடுமே அந்நிய மொழியல் இரகசியம் பேசி ஆவியில் நிறைந்து ஜெபிக்கனுமே
பிரசன்னத்திலே நிலைத்திருக்க கன்மலை மறைவில் மூடிடுமே ஞானத்தின் ஆவியை என்னில் ஊற்றி கிருபையை உணரச் செய்திடுமே
வல்லமையை பொழிந்திடுமே அக்கினி ஜூவாலையாய் மாற்றிடுமே உச்சந்தலை முதல் உள்ளங்கால் புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றிடுமே