வல்லமையாலே இடைகட்டி
vallamaiyaalae idaigatti
1. வல்லமையாலே இடைகட்டி பெலத்தினாலும் இடைகட்டி வானாதி தேவனை வாழ்த்திடுவோமே அனத தேவனை உயர்த்தி நாமும் நம் தேவன் என்றும் நல்லவர் தாமே நடத்துவாரே நலமுடன்
2. பூமியை நீதியாய் நியாயந்தீர்ப்பார் பூலோகத்தையும் ஜனத்தையும் வானமும் பூமியும் மகிழ்ந்து பூரிக்கும் சமுத்திரமும் நிறைவாய் முழங்கும் நம் தேவன் என்றும் நல்லவர் தாமே நடத்துவாரே நலமுடன்
3. வலதுகரம் பரிசுத்த புயமும் இரட்சிப்பை நமக்கு தந்ததினால் புதுப்பாட்டைப் பாடுவோம் பாடுவோம் அதிசயங்கள் செய்பவர் இவரே நம் தேவன் என்றும் நல்லவர் தாமே நடத்துவாரே நலமுடன்
4. வருவேன் என்றவர் வந்திடுவார் தாமதியாமல் நிச்சயமாய் தலைகள் உயர்த்தி நடப்போம் நாமே மீட்பு சமீபம் ஆயத்தமாவோம் நம் தேவன் என்றும் நல்லவர் தாமே நடத்துவாரே நலமுடன்.