வல்லமையாக இங்கு வந்திடுமே
vallamaiyaaga ingu vandhidumae
வல்லமையாக இங்கு வந்திடுமே தேவ ஆவியே (உம் பிரசன்னத்தால் என்னை நிரப்புமே தூய ஆவியே -2 ஆவியே தூய ஆவியே வல்லமையாய் வாருமே -2
சீனாய் மலையில் இறங்கி நீரே எங்கள் மத்தியில் வாருமையா -2 ஆனந்த தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே -2 ஆவியே தூய ஆவியே வல்லமையாய் வாருமே -2
ஆவியின் வரங்களால் என்னை நிரப்பி அபிஷேகம் செய்திடும் இந்த வேளையில் -2 எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே -2 ஆவியே தூய ஆவியே வல்லமையாய் வாருமே -2
துன்பங்கள் துயரங்கள் துடைத்திடவே தூயவரே இன்று வாருமையா -2 கண்ணீர் கவலைகள் கட்டுகள் யாவும் அறுத்துப் போடணுமே -2 ஆவியே தூய ஆவியே வல்லமையாய் வாருமே -2