வல்லமைச் சுருதியே வல்லமைச்
vallamais surudhiyae vallamais
1. வல்லமைச் சுருதியே வல்லமைச் சுருதியே வாருமிந்தப் புதுத்தினத்தில் தந்தை தாயானோர்களும் சொந்தமான பேர்களும் இங்கு உமக்கு ஸ்தோத்திரம்
2. காருண்யக் கர்த்தனே காருண்யக் கர்த்தனே காரு மிந்தப் புதுத்தினத்தில் அந்தகாரம் நீங்கவே துங்கனரு ளோங்கவே உந்தனருள் ஊற்றிடுவாயே தங்கமேயுமக்கு ஸ்தோத்திரம்
3. சாந்தத் திரு வடிவே சாந்தத் திரு வடிவெ சோர்ந்திடாதிப் புதுத்தினத்தில் பெந்தெகொஸ்தின் வாசனே அந்த ஆவி நீளவே எங்கள் மீந்திடுவாயே தந்தையே உமக்கு ஸ்தோத்திரம்
4. ஆருயிர் சொரூபியே ஆருயிர் சொரூபியே ஆதரிக்கப் புதுத்தினத்தில் வந்த தேவ மைந்தர்கள் உந்தன் பிரிந்திடுமா திறந்திடு மெங்கள் பரனே வேந்தனே யுமக்கு ஸ்தோத்திரம்
5. உத்தம நற் போதனே உத்தம நற் போதனே உண்மையாயிப் புதுத்தினத்தில் போதகத்தி ஊழியர் சாதனை யடைந்திட நாதனே உம் காதலீந்திடும் அன்பரே யுமக்கு ஸ்தோத்திரம்