வல்லமை வல்லமை உயிர்த்தெழுப்பும்
vallamai vallamai uyirthezhuppum
வல்லமை வல்லமை உயிர்த்தெழுப்பும் ஆவியின் வல்லமை -(2)
உனக்குள்ளாய் பாயட்டும் எனக்குள்ளே இறங்கட்டும் அற்புதம் நடக்கட்டும் அதிசயம் காணட்டும் என் கண்கள் காண
பள்ளத்தாக்கிலே இறங்கிய வல்லமை காய்ந்த எலும்புகளில் வீசிய வல்லமை -(2) அசைவு உண்டாகும் தேவ வல்லமை காலூன்றி நிற்க்க செய்த ஆவி வல்லமை
இரவெல்லாம் காற்றா இறங்கிய வல்லமை கடலை இரண்டாகப் பிரித்திட்ட வல்லமை -(2) பாதை காட்டின தேவ வல்லமை வெற்றி சிறக்க செய்த ஆவி வல்லமை
பரலோக காற்றா இறங்கிய வல்லமை குமுரல் உண்டாகும் ஆவியின் வல்லமை -(2) அக்கினியால் இறங்கும் தேவ வல்லமை புதிய நாவைதந்த ஜீவ வல்லமை
மரித்த இயேசுவை எழுப்பிய வல்லமை மருரூபமாக்கிய தேவனின் வல்லமை -(2) என்னில் வாசம் பண்ணும் ஆவி வல்லமை சாவை வென்று விட்ட ஜீவ வல்லமை