வல்லமை வல்லமை ஆவியே
vallamai vallamai aaviyae
வல்லமை வல்லமை ஆவியே (வல்லமை வல்லமை ஆவியே என்னை அனலாக்கிடும் வல்லமை வல்லமை ஆவியே என்னை அபிஷேகியும்) -2
சாத்தானின் கோட்டையை முறியடிக்க வல்லமை தாருமே -2 தேவனின் இராஜ்ஜி யம் எழும்பிகட்ட வல்லமை தாருமே -2
பரிசுத்த ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பிடும் -2 கனிகளைக் கொடுத்து சாட்சியாய் வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன் (2)
வல்லமை ஊழியம் செய்திடவே ஆவியால் நிரப்புவீர் - (2) வியாதியை நீக்கி பிசாசை விரட்ட வல்லமை தாருமே - (2)
தேவ ஊழியர் யாவர் மேலும் ஆவியை ஊற்றுவீர் - (2) வாலிபர் யாவரும் தரிசனம் காண ஆவியை பொழிந்திடும் - (2)