வல்லமை வல்லமை
vallamai vallamai
வல்லமை வல்லமை வரங்கள் அளித்திடும் வல்லமை
மாறாத இயேசுவின் வல்லமை மகிமைத் தந்திடும் வல்லமை உன்னத தேவனின் வல்லமை உனக்காய் புறப்படும் வல்லமை
நோய்களை நீக்கிடும் வல்லமை பேய்களைத் துரத்திடும் வல்லமை கட்டுகள் உடைக்கும் காயங்கள் ஆற்றும் காருண்ய தேவனின் வல்லமை
அற்புதம் செய்திடும் வல்லமை அறிவை உணர்த்திடும் வல்லமை அன்பாய் என்னில் ஆளுகை செய்யும் அன்பர் இயேசுவின் வல்லமை
பாஷைகள் தந்திடும் வல்லமை பரிசுத்தமாக்கிடும் வல்லமை பாரினில் என்னை மேன்மைப்படுத்தும் பரிசுத்த ஆவியின் வல்லமை வல்லமை
ஞானத்தை போதிக்கும் வல்லமை தீர்க்க தரிசன வல்லமை விசுவாசம் தந்திடும் வியாக்கியானம் செய்திடும் திரியேக தேவனின் வல்லமை