வல்லமை அருள்நிரைவே வாரும்
vallamai arulniraivae vaarum
வல்லமை அருள்நிரைவே வாரும் பின்மாரி பொழிந்திடுமே தேவ ஆவியே தாகம் தீருமே வல்லமையால் இன்று எம்மை நிரப்பிடுமே
புது எண்ணெய் அபிஷேகம் புது பெலன் அளித்திடுமே நவ மொழியால் துதித்திடவே வல்லமை அளித்திடுமே
சத்திய ஆவியே நீர் நித்தமும் நடத்திடுமே முத்திரையாய் அபிஷேகியும் ஆவியின் அச்சாரமாய்
அக்கினி அபிஷேகம் நுகத்தினை முறித்திடுமே சத்துருவை ஜெயித்திடவே சத்துவம் அளித்திடுமே
தூய நல் ஆவிதனை துக்கமும் படுத்தாமல் தூயவழி நடத்திடவே பெலன் தந்து காத்திடுமே