வல்ல ஆவியே வாரும்
valla aaviyae vaarum
வல்ல ஆவியே வாரும் ஆவியே வல்லமையால் நிரப்பிடுமே வல்ல ஆவியே வாரும் ஆவியே வந்தோருக்கு வாழ்வு கொடுத்திடுமே
பெந்தேகோஸ்தே நாளின் நிறைவினிலே அக்கினியாக இறங்கினீரே பெலவீனரான யாவரையும் பெலவானாக மாற்றிடுமே
மாம்சத்தின் கிரியைகள் மறந்திடவே மகிமையின் சாயம் தடுத்திடவே மறுரூபமாக பறந்திடவே மணவாளனோடு சேர்ந்திடவே
உந்தன் ஆவிக்கு காத்திருக்கும் உம் அடியார் மேல் ஊற்றிடுமே உம் வல்ல வரங்கள் ஒன்பதையும் உம் அடியார்க்கு ஈன்றிடுமே