வலப்பக்கம் இடப்பக்கம்
valappakkam idappakkam
வலப்பக்கம் இடப்பக்கம் இடங்கொண்டு பெருகுவாய் மகனே (மகளே) பெருகிடுவாய் வாக்குத்தத்தம் செய்தவர் (உண்மையுள்ளவர்-2) பெருகிடுவாய் நீயும் பெருகிடுவாய் வலப்பக்கம் இடப்பக்கம் பெருகிடுவாய்
வானத்தில் ஒளி வீசும் சுடர் போலவே வாக்கு மாறா தேவன் பெருக செய்வார் கடற்கரை மணல் திரள் போலவே கர்த்தர் உன் சந்ததியை பெருக செய்வார் பெருகிடுவாய் நீ பெருகிடுவாய் ஒளி வீசும் சுடர் போல் பெருகிடுவாய்
மந்தை பெருகுவது போலவே மகிமையின் தேவன் உன்னை பெருக செய்பவார் மாறாத தம் கிருபையினாலே ஆவியின் வரங்களை பெருக செய்வார் பெருகிடுவாய் நீயும் பெருகிடுவாய் ஆவியின் வரங்களால் பெருகிடுவாய்
பரவி பாய்கின்ற நதி போலவே பரமன் அபிஷேகத்தை பெருக செய்வார் ஊற்று தண்ணீராக உள்ளத்தின் வல்லமையை பொங்கி பொங்கி வழிய செய்வார் பெருகிடுவாய் நீ பெருகிடுவாய் அபிஷேகத்தால் நீ பொருகிடுவாய்