வைகறைப் பொழுதின் வசந்தமே
vaigaraip pozhudhin vasandhamae
வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா ( 2 ) வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா வழியிருளினிலே வளர்மதியென வா இங்கு பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா
அலைகளில்லா கடல்நடுவே பயணமென என் வாழ்வு அமைதியெங்கும் அமைதியென பயண்மதை நான் தொடர் ( 2 ) இறைவா என் இறைவா இதயம் எழுவாய் நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திட வா
இடர் வரினும் துயர் வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும் எனைப் பிரியா நிலையெனவே இணைபிரியா துணையெனவே ( 2 ) இறைவா என் இறைவா இதயம் எழுவாய் நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் எந்தன் வாழ்வு ஒளிர