வாழ்வு தரும் ஒளியும் நீயே
vaazhvu tharum oliyum neeyae
வாழ்வு தரும் ஒளியும் நீயே - இயேசுவே வாழ்வு தரும் வழியும் நீயே - 2 உம்மிடம் வருபவர்கள் பசியடையார் நம்பிக்கை வைப்பவர்கள் தாகம் அடையார் - 2
உம் வார்த்தை கேட்போரெல்லாம் . . . எந்நாளும் நிலைத்திருப்பர் எப்பொழுதும் கனி தருவர் உன் நாமம் புகழ்ந்திடுவர் உன் அன்பில் நிலைப்போரெல்லாம் . . , உன் நினைவாய் வாழ்ந்திடுவர் உம் வழியில் நடந்திடுவர் உம் பணியை தொடர்ந்திடுவர் வார்த்தையான இயேசுவே ஆசீர் தாருமே - 2 உம் படைப்பாய் வாழவே எம்மை மாற்றுமே
உம்மை நம்பி வாழ்வோரெல்லாம் வெறுமையாய் சென்றதில்லை வழிதவறி நடந்ததில்லை ' வான் வெளியை கண்டிடுவர் உம் விருப்பம் செய்வோரெல்லாம் உமக்காக வாழ்ந்திடுவர் உம்மருளை தந்திடுவர் நிறைவாழ்வை பெற்றிடுவர் வார்த்தையான இயேசுவே ஆசீர் தாருமே - 2 உம் படைப்பாய் வாழவே எம்மை மாற்றுமே