வாழ்வு தந்தவரே
vaazhvu thandhavarae
வாழ்வு தந்தவரே உமக்கு நன்றி ஐயா வாழ வைத்தவரே உமக்கு நன்றி ஐயா
நன்றி உமக்கு நன்றி உயிருள்ள நாளெல்லாம் உயிருள்ள நாளெல்லாம்-என்
1.யேகோவா ராஃபாவாய் என்னோடு இருந்து சுகம் தந்தீரையா தழும்புகளாலே குணமாக்கி என்னை காத்துக் கொண்டீரையா
2.யேகோவா ஷம்மாவாய் என்னோடு இருந்து தினமும் நடத்தினீரே பாதம் கல்லில் இடரிடாமல் கரங்களில் ஏந்தினீரே
3.தீங்கு நாளில் கூடார மறைவில் என்னை ஒழித்து வைத்தீர் வாதை என்னை அணுகிடாமல் கிருபையால் மூடிக்கொண்டீர்