வாழ்வின் ஒளியே வாரும்
vaazhvin oliyae vaarum
வாழ்வின் ஒளியே வாரும்-உமது வல்லமையால் எம்மை நிரபபும் தேடிடும் இதயங்கள் கோடி-இங்கு தேடி வந்தோம் உம்மை நாடி
நாடியே வந்தெம்மை மீட்டிடும்-தெய்வ நாயகர் நீரல்லவோ பாடியே உமது பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரம் செய்ய வந்தோம்
சத்தியப் பாதையை அறிந்தோம்-உமது வார்த்தையினால் இன்று பிழைத்தோம் எத்திசை சென்றாலும் இயேசுவே-உமது மகிமையை எடுத்துச் சொல்லுவோம்
வாடிய உள்ளத்தின் நோய் நொடி துன்பத்தை போக்கிடும் தூயவர் நீரே ஆயனாய் வந்தெம்மை ஆட்கொண்ட தேவ மேய்ப்பனும் நீரல்லவோ