வாழ்வது உனக்கொரு வாழ்வு
vaazhvadhu unakkoru vaazhvu
வாழ்வது உனக்கொரு வாழ்வு வாழ்ந்திடு அழைத்த இயேசுவுக்காய் சேனையை நடத்திடும் தளபதி நீ பரிசுத்த சேனையை எழுப்பி விடு
சிம்சோன் கையின் தாடையெலும்பு சிறந்த வெற்றியைத் தந்துவிட்டது அபிஷேகம் நுகங்களை முறித்திடுமே அமர்ந்திடும் காலம் இதுவல்லவே
கிதியோன் கையின் தீவெட்டிகள் கர்த்தர் பார்வையில் பட்டயங்கள் உலக ஞானம் ஒன்றுமல்ல உன்னத ஞானம் உயர்த்திடுமே
ஜீவனை பலியாய் வார்த்து விடு இரத்தத்தில் இயேசுவுக்கு எழுதிக்கொடு ஜீவனோ மரணமோ துணிந்துவிடு ஜெயக்கொடி தேசத்தில் நாட்டிவிடு