வாழ்த்திடுவோம் ஜீவ தேவன்
vaazhthiduvom jeeva devan
வாழ்த்திடுவோம் ஜீவ தேவன் வணங்கிடுவோம் அவர் நாமத்தையே புகழ்ந்திடுவோம் அவர் நாமத்தையே.
1. துதித்தலுடனே அவர் சந்நிதியில் வாருங்கள் என்ற தாவீதைப் போல ஆவியில் ஆர்ப்பரித்தாடிடுவோம் ஆத்துமாவில் களி கூர்ந்திடுவோம்
2. பரிசுத்த தேவனை தரிசிக்க பரமனை துதித்து மகிழ்ந்திடவே வாரத்தில் முதல் நாள் காலையிலே ஆலயம் தங்கியே தொழுதிடுவோம்
3. நம் சரீரத்தை நாம் பரிசுத்தமாய் ஜீவ பலியாய் ஒப்படைப்போம் இதுவே நாம் செய்யும் புத்தியுள்ள ஆராதனை யாம்; அல்லேலூயா
4. நம் மனம் போல் நான் நடவாமல் பரிசுத்த தேவன் நம்மை பூமியில் உயர்த்தி ஏற்றிடுவார்