வாழ்க வாழ்க இயேசு
vaazhga vaazhga yesu
வாழ்க வாழ்க இயேசு நாமம் வாழ்க வாழ்க வாழ்க இயேசு ராஜா வாழ்க (2)
1. அதிசயங்கள் பல செய்யும் நாமம் அற்புதங்கள் என்றும் நடத்தும் நாமம் (2) அதிகாரம் அனைத்தும் உள்ள நாமம் இயேசு வல்லால் வேறு நாமமில்லையே
2. உன்னதர் பாடும் மகிமையின் நாமம் என்றும் மாறாத கிருபை நாமம் (2) உயிரோடு எழுந்த உண்மை நாமம் இயேசுவல்லால் வேறு நாமமில்லையே
3. பாவத்தை போக்கும் சுத்த நாமம் சாபத்தை மாற்றும் வல்ல நாமம் (2) சாத்தானை ஜெயித்த மீட்ட நாமம் இயேசுவல்லால் வேறு நாமமில்லையே
4. நம்பினோர் கண்ணீர் துடைத்திடும் நாமம் நம்பிக்கை அளித்து நடத்தும் நாமம் (2) பிள்ளையாய் மாற்றி அணைக்கும் நாமம் இயேசுவல்லால் வேறு நாமமில்லையே
5. வெற்றியின் வாழ்வை அருளும் நாமம் குறைவை நிறைவாய் மாற்றும் நாமம் உண்மை அன்பை காட்டும் நாமம் இயேசுவல்லால் வேறு நாமமில்லையே
6. மறுபடியும் வருகின்ற நாமம் பரலோகம் நம்மை சேர்க்கும் நாமம் துதியில் மகிழும் செம்மை நாமம் இயேசுவல்லால் வேறு நாமமில்லையே