வாழவைக்கும் வார்த்தை
vaazhavaikkum vaarthai
வாழவைக்கும் வார்த்தை எங்கே என்றே தேடினேன்-எனக்கு
வாழ்வளிக்க இயேசுவைத் தான் தேடி ஓடினேன் காலமெல்லாம் என்னைக் காக்கும் கவசமானதே வார்த்தையென் கால்களுக்கு வெளிச்சமாகி வழியைக் காட்டுதே-நல்ல வழியைக் காட்டுதே
நீதியுள்ள பாதைதனை வேதம் காட்டுதே-நமக்கு நேர்மையான காரியத்தை நினைவு மூட்டுதே ஆதியிலே வார்த்தையாக தேவன் வந்தாரே நமக்கு ஆண்டவர் நான் என்று சொல்லி அறிவைத் தந்தாரே-நல்ல அறிவைத் தந்தாரே
தேவன் ஒன்றே என உலகம் தெரிந்து கொள்ளட்டுமே நம்மைத் தேடிவரும் தெய்வம் இயேசு என உணரட்டுமே நம் பாடுகளை அனுபவித்த பரமபிதாவின் ஜீவ வார்த்தைக்குத்தான் மதிப்பளித்து கீழ்ப்படியட்டுமே-உலகம் கீழ்ப்படியட்டுமே