வாசனை வீசுதே இயேசுவின் அன்பு
vaasanai veesudhae yesuvin anbu
1. வாசனை வீசுதே இயேசுவின் அன்பு - வான் புவி மத்தியிலே இயேசையர் அன்பை எவ்விதம் சொல்லுவேன் நாவுதான் போதாதே -2
2. விண்ணின் மகிமை தூதரின் சேவை மன்னவர் விட்டதுமே - இயேசு கண்ணியம்விட்டது எண்ண முடியாது கர்த்தரின் அன்பு -2
3. மாட்டுத்தொழு முதல் தூக்குமரம் வரை ஊக்கமாய் பாடுபட்டு -வெகு சாட்டிய குற்றமும் சாந்தமாய் மன்னித்த ரக்ஷகரின் அன்பு - 2
4. எத்தனை பாவங்கள் நித்தமும் செய்தேன் -சித்தத்தை எண்ணவில்லை -மாறா அத்தனை பாவமும் சக்தியாய் அழித்த அண்ணலின் அன்பு
5. பாவக்குழியிலே பேயினறையிலே - படுத்திருந்தபோது - நானும் மேவியே ஆனவர் உருகியே பார்த்து தாவியெடுத்த அன்பு - 2
6. துன்பங்கள் வந்து தொல்லைகள் சேர்ந்து - அல்லல்கள் அண்டும்போது - மகா இன்பமாய் ஏற்று தம்பாதம் அணைக்கும் எம்பிரானின் அன்பு - 2
7.நிந்தைகள் வந்தும் நேசர்கள் தூஷித்தும் - அந்தனாய் நின்றபோது - ஏழை நிந்தையைப் பார்த்து சாந்தமாய் அணைத்த தற்பரனின் அன்பு -2
8. துதிக்கத்துதிக்கத் துள்ளுதே உள்ளம் - வள்ளலின் இயேசு வல்லமையால் எதிர்க்கும் உலகை உதைத்துத் தள்ளும் மனுவேலின் அன்பு - 2
9. ஒன்றுமில்லாத என்றுமில்லாத ஏழையடியானுக்கு வெறும் வென்றவர் வீட்டை கட்டிவருவது மாறாதவர் அன்பு - 2
10. பாவியே விடாயோ ஆகாத வாழ்வை - பாவ ஜீவியத்தை - கொடும் கூவியேகூப்பிடம் புவினில் எப்போதும் கொற்றவனின் அன்பு