வாரும் விரைவாக
vaarum viraivaaga
வாரும் விரைவாக - வான் புறாவே
தந்தேனிவ்வேளை சொந்தமதாக எந்தனை முற்றுமாக - உமக்கே
உள்ளத்திலுள்ள கள்ளங்கள் நீக்கி வெள்ளம்போல் வருவீரே - அன்பின்
சக்தியில்லாத மக்களுக்கின்று சக்தியளித்திடவே - இந்நேரம்
ஆவியின் அனல் அணையவிடாது தாவிப்படர்ந்திடவே
அத்தன் இயேசுவைத் தைரியமாக வையகத்தில் சாற்ற வலிமையாய்
சுத்த ஜீவியம் இத்தரை மீதில் சக்தியுடன் ஜீவிக்க - சகலரும்
சரீரம், ஆவி, ஆத்துமா முழுதும் பூரணமாய் விளங்க முற்றிலும்