வாரும் வாரும் மகத்துவ தேவனே
vaarum vaarum magathuva devanae
வாரும் வாரும் மகத்துவ தேவனே வல்லமையாக இப்போ வந்திடும்
மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே! மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே - வாரும்
தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்கு தரணியில் வேறோர் துணை இல்லையே - வாரும்
பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும் பரிசுத்த ராஜனே! நீர் வாருமே - வாரும்
பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற பரலோக ராஜனே! நீர் வாருமே - வாரும்
காருண்ய தேவனே! கதியும்மை யண்டினோம் கடைசிவரையும் காத்து இரட்சியும் - வாரும்
மன்னா! உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க ஏவுதல் தினம் தாரும் ஏகனே - வாரும்
விழிப்புள்ள ஜீவியம் விமலா! நீர் ஈந்துமே வெற்றியடையக் கிருபை தாருமே - வாருமே
இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம் - வாரும்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Am C Gm C F F Dm C C F F Dm C C F F Dm C C F F Dm C C F