வாரும் பரனாவியே
vaarum paranaaviyae
வாரும் பரனாவியே தாரும் உந்தன் கிருபைகளை அடியார் நெஞ்சம் அனல் கொண்டெரிய அன்பரே உம்மை அண்டி வந்தோம்
இந்நேரமே உம் ஆவியால் அடியார் நெஞ்சம் நிரப்பிடுமே
1. சத்திய ஆவியானவரே நித்திய பாதை காட்டிடுமே பாவியர் நெஞ்சம் பரண் உம்மைக் காண ஆத்தும் கண்கள் திறந்திடுமே
2. எங்கள் நெஞ்சம் பாழ் நிலமாம் ஏழை மீது அருள் பொழியும் மாசுடர் அருளே மங்கிடா திருவே மாந்தர்கள் எம்மை நோக்கிடுமே
3. ஒவ்வொரு நாளும் புது எண்ணெய்யால் ஒவ்வொரு நாளும் புது பெலத்தால் நிரப்புவேன் என்று மொழிந்த என் தேவா நிரப்பிடும் எங்கள் உள்ளங்களை