வாரும் தேவா வானவராஜா
vaarum devaa vaanavaraajaa
வாரும் தேவா வானவராஜா காருண்ய அதிபதியே - ஸ்தோத்திரம்
வல்லமை ஞானம் நிறைந்தோர் - தேவரீர் எல்லா மகிமை கனம் துதி பெலனானோர் - 2 ஸ்தோத்திர பாத்திரர் - 2 - ஓயாமல் ஆர்ப்பரிக்க ஆண்டவனார்
பரிசுத்த நாமத்தில் நாங்கள் - தேவரீர் தரிசிக்கவே வந்தோம் தயாபரா தந்தையே - 2 கரிசனை யோடும்மை - 2 - கருத்தோடு ஆவியாலே ஆராதிக்க
தந்தையே வாரும் நீர் தயவாய் - தேவரீர் மைந்தர்கள் கூடிடும் மத்தியில் விரைவாய் - 2 ஈந்திடும் அருளை 2 - தந்திடும் ஆசீர்வாதம் ஏராளமாக
மகிமையால் மதிலாகச் சூழும் - தேவரீர் தகித்திடும் அக்கினியால் சத்துருவும் மாளும் - 2 வகித்திடும் ஆசனம் - 2 - போதித்திடும் வசனம் உம் வாக்குடனே
அபிஷேகம் செய்திடும் தூதை - தேவரீர் கவிசேஷம் விளங்கிடத் திறந்திடும் மனதை - 2 தவித்திடும் மனதில் - 2 உதித்திட சத்தியமே சாட்சியாக
கொண்டிடவே உந்தன் மீட்பை ஜாதிகள் வேண்டிட அபிஷேகம் வேகம் உம்மன்பை - 2 அண்டிட உம்மையே - 2 - ஆதரவாக பரிகாரியாக