வாரும் தேவா தேவ சேயா
vaarum devaa deva seyaa
வாரும் தேவா தேவ சேயா காத்திடுவாய் கிருபை கூர்ந்து
காரும் தேவா கருணை கூர்ந்து கருதினேன் திருப்பாதம் வருந்தினேன் பதம் பாடவே - வாரும்
1. பாவியாய் திரிந்தலைந்தேன் பாரினிலே வெகுகாலம் ஆவி தந்துணர்த்தித் திருப் பாதாம் சேர்த்த இயேசு நாதா பதம் பாடுவேன் திருவருளால் - வாரும்
2. இஸ்ரவேலின் காணியாட்சி எனைப் பிரிந்தும் நின்றதை யேகோவா எனக்களித்து இணைத்த பெரும் நன்றியால் இசைத்திடுவேன் என்றென்றுமே - வாரும்
3. ஒருவரும் சேரக்கூடாத உம்பரமே என் பாரமாய் பிரியமுடன் எனக்களித்த பேசும் மறு பாஷையில் உரிமையுடன் பாடிடுவேன் - வாரும்
4. அப்பாவே தேவப் பிதாவே அளித்திடுவாய் நல்வரங்கள் இப்பாரினிலே உம் வரவை ஆகிடவே மனமகிழ் வாய் பாடிடுவேன் அதை நினைந்து - வாரும்
5. வாரும் தேவாட்டு குட்டியே வாரும் சீயோன் மலைச்சிகரில் காரும்தேவ தாசர் நூற்று நாற்பத்தினாலாயிரம் பேருள் ஆடிப் பாடி மகிழ்ந்திட நான் - வரும்
6. சாட்சியாய் மொழிந்த தேவா தரணிதனில் நீர் எப்போ வருவார் மாட்சியோடு மகிமையில் நான் ஆட்சி பெற்று ஆர்ப்பரித்து ஆமெனாமென் என்று பாட - வாரும்