வார்த்தையிலே வல்லவரே
vaarthaiyilae vallavarae
வார்த்தையிலே வல்லவரே செயல்களில் மகத்துவ மாணவரே -(2) கிருபையிலே பரிபூரணரே -(2) ஆராதனை உமக்கு ஆராதனை -(2) ஆராதனை ஆராதனை சீர் இயேசு ராஜனுக்கு ஆராதனை-(2)
மனதுருக்கம் உள்ளவரே மன்னிப்பதில் வள்ளல் நீரே -(2) மனமிரங்கும் தெய்வம் நீரே -(2) ஆராதனை உமக்கு ஆராதனை
தாயை போல் அணைபவரே தந்தையைப்போல் சுமப்பவரே -(2) நண்பனைப் போல் அரவணைப்பவரே -(2) ஆராதனை உமக்கு ஆராதனை
அற்புதமே அதிசயமே ஆறுதலின் நாயகரே -(2) மறைவிடமே என் உறைவிடமே -(2) ஆராதனை உமக்கு ஆராதனை