வார்த்தையே தேவனாக
vaarthaiyae devanaaga
வார்த்தையே தேவனாக ஆகி வந்ததால் தேவ வார்த்தையே எங்களை வாழ வைக்குது
வாழ வைக்குது எம்மை வாழ வைக்குது இயேசுவின் வார்த்தையே வாழ வைக்குது
இயேசுவின் வார்த்தையில் சுத்தம் உள்ளது அந்த வார்த்தையில் கர்த்தரின் சித்தமுள்ளது
மன மாறுதலைத் தந்துவிடும் அர்த்தமுள்ளது தேவ வார்த்தை எங்கள் கால்களுக்கு வெளிச்சமானது
இயேசுவின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதால் எங்கள் வாழ்விலே நிம்மதி தேடி வந்தது
மாசில்லா ஜீவனை மீட்டுக் கொண்டதால் அந்த ஜீவனுள்ள வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளுவோம்