வார்த்தை வடிவாகி
vaarthai vadivaagi
வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே-நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே
ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்-தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம்
அன்பு வலை வீசி எம்மை ஆண்டிடவே-நீர் அருள் வடிவாக வந்த தேவமகன்
துன்பச் சுமை நீக்க வந்த பேரொளியே-எங்கள் தூயவரே உம்மைப் பணிந்து பாடுகிறோம்
தந்தை உம்மைச் சிந்தையிலே ஏற்றிடவே-நாளும் தேடுகின்ற உள்ளங்களோ கோடி இங்கே
அன்பு வெள்ளம் பெருகி இங்கே பாயுதப்பா-உமது ஆறதலைக் காண வந்த வேளையிலே
சத்தியத்து நாயகனாய் வந்தவரே- உலகச் சர்வ வல்ல தேவனாகி நின்றவரே
நித்தியத்து ஜீவனையும் தாருமையா-இயேசு நாயகனே மனமிரந்து வேண்டுகின்றோம்