வாராயோ நீ தஞ்சமெனவே
vaaraayo nee thanjamenavae
வாராயோ நீ தஞ்சமெனவே தாங்கிடுவார் உன்னை அன்பாலே
நோய்களைத் தீர்ப்பேனென்றார் - யேகோவா திருமறை வாக்கிதுவே வார்த்தை விடுத்தே வாதையகலுமென்ற வாக்கிற்குச் செவி சாய்த்தே - நீரும் - வாரா
அற்புத அடையாளங்கள் முன் போல் இன்றும் விளங்கிடுதே பேதமை நீக்கி ஐயம் அகற்று அதிசய சுகம் பெறவே - நம்பி - வாரா
பக்தன் யவீரு வீட்டில் நம் இயேசு அற்புதம் செய்தனர் சாவை வென்று ஜெயித்துமே உயிர்த்த தேவனுக்கிணையில்லையே - அண்டி - வாரா
இறைவன் விலாவதிலே சிந்திய உதிரம் உந்தனுக்கு என்றுமே மாற வல்லமையான இயேசுவின் நாமமதை - நாடி - வாரா.
கல்வாரிக் குருசினிலே பெருகுதே ஜீவனும் ஊற்றாக தாவி வரும், மேவி ஏற்பார் தாமதம் செய்யாதே - தேடி - வாரா