வானோர் வணங்கும் சர்வேசா
vaanor vanangum sarvesaa
1. வானோர் வணங்கும் சர்வேசா! விந்தைக் கிருபாசன வாசா! கானான் பதி சங்கையின் ராசா! கருணை பொழியும் யேசுராசா சுவாமி ஆமென்! (3)
2. பரமண்டலத்தைத் திறந்தீரே! பாவிகளுக்காய்ப் பிறந்தீரே! தரைமண்டலத்தைப் புரந்தீரே! தயவாய் உயிரைத் தந்தீரே! சுவாமி ஆமென்! (3)
3. சத்திய பாதையும் ஜீவனுமாய் சற்குருவும் நல் மேயப்பனுமாய் சுத்த ஞான வைத்தியராய் சிறந்தெந் நானும் அருள் புரிவீர். சுவாமி ஆமென்! (3)
4. இரங்கும் இரங்கும் பராபரமே! எங்கும் இருக்கும் நிராகரமே! திறன்கள் அளிக்கும் சுந்தரமே! தினமும் அடியார் மந்திரமே. சுவாமி ஆமென்! (3)