வானில் தூதர்கள் கூடிட
vaanil thoodhargal koodida
பிறந்தார்.. யெஷுவா.. பூமியில்.. - 2
வானில் தூதர்கள் கூடிட மந்தை மேய்ப்பர்கள் சூழ்ந்திட சாஸ்திரிகள் பணிந்திட (நம்)இயேசு ராஜன் பிறந்தார் - 2
பிறந்தார் தேவ பாலனாய் உதித்தார் நீதியின் சூரியனாய் ஜொலித்தார் நட்சத்தரமாய் நம் வாழ்வை மாற்றும் மாராஜனாய் - 2
1. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததே யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததே தாவீதின் அரசன் பிறந்தாரே பாவ உலகை மீட்டிட - 2
2. யூத ராஜ சிங்கமாய் பறந்து காக்கும் பட்சியாய் உன்னதர் இயேசு பிறந்தாரே அற்புதங்கள் செய்திட - 2
3. இரண்டாம்(இயேசுவின்) வருகை சமீபமே நியாயத் தீர்ப்பும் நெருங்குதே பரம வீட்டில் வாழ்வோமே ராஜ ராஜன் தோன்றிட - 2