வானில் தோன்றுவார்
vaanil thondruvaar
வானில் தோன்றுவார் நம் இயேசு ராஜன் ஆ! நாமும் செல்வோம்
1. புவியிலானோர் புலம்புவார், சுத்தரானோர் மகிழுவார் கூடுவோம் பாடுவோம் வானத்திலன்பருடன் குறைகள் நீங்கிக் கறைகள் மாறும் சுத்தர் வாருமே - வா
அன்பர் முகத்தை காண்போம், இன்று மார்பில் சார்வோமே அருந்தவே விருந்திலே அறிய கிருபை செய்தாரை அருமையாம் என் நேசர் நம்மை மீட்டார் தமக்காய் - வா
3. நொடியில் துன்பம் நீங்கும், கொடிய பேய் அழியும் முடியும் முடிவில் அடியாரும் தரிப்போமே விடியும் வேளை காணும்படியே பணிவோமவருக்கே - வா
4. சீயோன் மழையும் காணுதே, ஜீவ நதியும் தோணுதே இனிமையே எங்குமே இன்பரானோர் நாட்டிலே இனி நான் என்றும் கனிவாய் அன்பில் மூழ்கிக் குளிப்போம் - வா
5. நீடூழியாய் வாழுவோம் நித்தியமாய் சேவிப்போம் நினைப்போமே நிறைவுடன் நீடித்த நன்றியுடன் நிகரான நம்மை மீட்டார் துதிப்போம் என்றுமே