வானில் எக்காளம் முழங்கிடவே
vaanil ekkaalam muzhangidavae
1. வானில் எக்காளம் முழங்கிடவே வாஞ்சையோடு பறந்திடுவோம் இப்புவித் துன்பங்கள் மறைந்திடுமே இயேசுவின் ராஜ்ஜியம் நெருங்கிடுதே
ஆ ஆமென் அல்லேலூயா ஆமென் வாரும் இயேசுவே (2)
2, கன்மலை வெடிப்பில் உத்தமியாய் கறைகள் திரைகள் அகற்றிடுவோம் கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே அவர் வரும் வேளைக்காய் காத்திருப்போம்
3. மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த மகிபன் உரைத்த வாக்கின்படி மாசற்ற மணவாட்டி சபை யதனை மகிமையில் சேர்க்கவே வந்திடுவார்
4. பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர் பாடுகள் பாதையில் ஏற்றதினால் தியாகத்தின் மேன்மையைக் காத்துக் கொண்டார் அவர் போல் மாறிய பறந்திடுவார்
5. மகிமையின் நாளும் நெருங்கிடுதே மணவாளன் சத்தம் கேட்டிடுதே மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க ஆயத்தம் தீவிரம் அடைந்திடுவோம்