வான்புறாவே வான்புறாவே
vaanburaavae vaanburaavae
வான்புறாவே வான்புறாவே என்னில் இறங்கிடும் கபடமில்லா மனிதனாக என்னை மாற்றிடும்
வானங்கள் திறந்திறங்க வல்லமையாய் வந்தவரே தேவாவியின் வெள்ளம் என்னில் புரள தேற்றி ஆற்றி பெலப்படுத்தும்
அபிஷேக வல்லமையால் நுகமெல்லாம் முறிந்திடுமே அபிஷேக நாதர் நீரல்லவோ ஆட்கொண்டு நிரப்பிடுமே
உன்னதத்தின் ஆவியினால் உலகத்தை ஜெயித்திடவே உண்மையான சாட்சியாய் வாழ்ந்திடுவேன் உயிருள்ள நாள் வரையில்