வானத்தின் பல கனிகள்
vaanathin pala kanigal
வானத்தின் பல கனிகள் திறக்கட்டும் தேசத்தில் பின்மாரி பொழியட்டும் காட்டுப் புறா சத்தம் கேட்கட்டும் அபிஷேக பெரு மழை பொழியட்டும்
ஊற்றிடும் -2 உந்தன் ஆவியை இடங்கொள்ளாமல் போகுமட்டும் ஊற்றிடுமே
1. ஜெபவீரர் ஜெயசேனை கூடட்டும் ஒரு மனம் ஒருமைப்பாடு விளங்கட்டும் சீயோனில் எக்காளம் ஊதட்டும் லேவியர் ஆசாரியர் எழும்பட்டும்
2. எழுப்புதல் எதிரொலி சத்தத்தால் எழும்பிடும் வாலிபரே வாருங்கள் எலிசாவும் எலியாவும் நீயல்லோ இந்த தேசம் இயேசுவை அறியட்டும்