வானமும் பூமியும் படைத்திட்ட
vaanamum poomiyum padaithitta
வானமும் பூமியும் படைத்திட்ட தேவனே! வானாதி வானங்களும் உம்மை கொள்ளாதே நீசனும் எந்தன் உள்ளில் வாசம் செய்திடவே என்னிலே மேன்மை யாதொன்றுமில்லையே
1. முட்செடி நடுவில் தோன்றிய உம் தயை முட்செடியாம் என்னை அழியாக் காத்ததே அக்கினி ஜுவாலை யாக மாற்றிடும் தேவா! அற்புத சாட்சியாய் மாறுவேன் உமக்காய் - வானமும்
2. தாய் மறந்தாலும் மறந்துடேன் என்றீர் தாயின் மேல் அன்பு கொண்ட என் நேசரே! வரைந்தீர் உன் உள்ளங்கையில் என்னையும் மருவின் சேர்ந்திட போதும் நீர் எனக்கு - வானமும்
3. உலர்ந்து உயிரில்லா சிதறிய எலும்புகள் உம் திரு வார்த்தையால் சேனையாய் மாறிட்டே உலர்ந்த என்னிலும் என் ஜீவன் ஊற்றி உயிர்ப்பித்து உந்தன் சேனையாய் மாற்றுமே - வானமும்
4. சகலத்தையும் இதோ புதிதாக்கினேன் என்றீர் சிருஷ்டிப்பின் வல்லமை கொண்ட என் நாதனே! என்னும் புதிதாக சிருஷ்டியும் இன்றே சிருஷ்டிகரே! உம்மை போல யான் மாறவே - வானமும்
5. ஜெயிப்பவன் யாவையும் சுதந்தரிப்பான் என்றீர் ஜெயித்தார் சிலுவையில் சாத்தான் முற்றுமாய் இயேசுவே! உம் ஜெயம் எந்தன் சொந்தமே ஜெயித்து வாழுவேன் யுகாயுகமாகவே - வானமும்