வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
vaanamum poomiyum malaippallathaakkum
வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்
சந்திர சூரியன் சகலமும்வணங்குதே எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2) உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும்
பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2) பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்
உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2) கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்