வானமீதில் ஏறி போன இயேசுவானவர்
vaanameedhil eri pona yesuvaanavar
வானமீதில் ஏறி போன இயேசுவானவர் வருகை நாளில் திரும்பி வருவார் தூதர்களுடன் ஆர்ப்பரிப்பு சத்தம் எங்கும் கேட்குமே ஆரவார எக்காளம் வானில் முழங்குமே அல்லேலூயா (4) -2
1. பரிசுத்தத்தை காத்துக் கொண்ட பக்தர் யாவரும் பறந்து செல்லும் பரவச நாள் நெருங்கி வருகுதே பாடு கஷ்டங்கள் சகித்து வாழ்ந்தவர்கள் பரமன் பாதம் பாடல் பாடி என்றும் மகிழ்வார்கள்
2. மாமிசம் இரத்தம் லோக ஆசை அழிந்து போகும் பாவ சாபம் ராகம் யாவும் மறைந்து போகும் இமைப்பொழுதில் மறுரூபம் பெறுவோமே - 2 மன்னன் இயேசு அழைத்து செல்வர் மா சந்தோஷமே
3. ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எங்கும் தொனிக்குதே சாட்சி கூறி செய்தி சொல்ல தருணம் தந்தாரே ஆத்துமாக்களை சேகரிப்போம் - ஆண்டவரின் வருகை நாளில் ஆனந்திப்போம்