வானமே வையமே பூமியின் நிறைவே
vaanamae vaiyamae poomiyin niraivae
வானமே வையமே பூமியின் நிறைவே நீ செவிகொடு என் இயேசுவுக்கே
மேய்ப்பரும் ஆனவரே மீட்பரும் ஆனவரே கூப்பிடும் வேளையில் ஒத்தாசையாய் அவரே போராட்ட மத்தியில் தேருதலே
வல்லமை ஆனவரே நல் ஆயனுமானவரே கல்லான உள்ளத்தை கனிவாக மாற்றிய கனிதர செய்திடும் காருண்யரே
உன்னதமானவரே தன்னையே ஈந்தவரே உத்தமத்தில் என்றும் சுத்தனாய் நிலைக்க உன்னத பெலன் ஈந்தவரே