வானமதில் ஏறிப்போன இயேசுவானவர்
vaanamadhil erippona yesuvaanavar
வானமதில் ஏறிப்போன இயேசுவானவர் வருகை நாளில் திரும்பி வருவார் தூதர்களுடன் ஆர்ப்பரிப்பின் சத்தம் எங்கும் கேட்குமே ஆரவார எக்காளம் வானில் முழங்குமே
அல்லேலூயா அல்லேலூயா
பரிசுத்தத்தைக் காத்துக் கொண்ட பக்தர் யாவரும் பறந்து செல்லும் பரவச நாள் நெருங்கி வருகுதே பாடு கஷ்டங்கள் சகித்து வாழ்ந்தோர்கள் பரமன் பாதம் பாடல் பாடி என்றும் மகிழ்வார்கள்
மாம்சம் இரத்தம் உலக ஆசை அழிந்து போகுமே பாவ சாபம் ரோகம் யாவும் மறைந்து போகுமே இமை பொழுதிலே மறுரூபம் பெறுவோமே மன்னன் இயேசு அழைத்துச் செல்வார் மா சந்தோஷமே
இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எங்கும் தொனிக்குதே சாட்சி கூறி செய்தி சொல்ல தருணம் தந்தாரே ஆத்துமாக்களை சேகரிப்போமே ஆண்டவரின் வருகை நாளில் ஆனந்திப்போமே